Scalar & Vector என்றால் என்ன?
Scalar என்பது ஒரு value மட்டும் கொண்ட அளவை.
அதாவது, அளவு (magnitude) மட்டும் இருக்கும், திசை (direction) இருக்காது.
Example:-
🌡 வெப்பநிலை (Temperature) → 30°C → அளவு மட்டும், திசை (Direction) இல்லை
⏰ நேரம் (Time) → 5 மணி நேரம் → அளவு மட்டும், திசை இல்லை
⚖ எடை (Mass) → 60 கிலோ → அளவு மட்டும், திசை இல்லை
🚗 வேகம் (Speed) → 40 km/h → அளவு மட்டும், திசை இல்லை
வேகம் (Speed) என்பது scalar quantity-க்கு ஒரு example மட்டுமே.
Also வெப்பநிலை (Temperature), நேரம் (Time), எடை (Mass), நீளம் (Length), பரப்பளவு (Area), அளவு (Volume) இவை எல்லாமே scalar quantities தான்.
அளவு (மதிப்பு) மட்டும் இருந்தால், திசை இல்லையென்றால், அதை Scalar Quantity என்று அழைப்பார்கள்.
Vector என்பது ஒரு value மட்டும் இல்ல, அதுக்கு திசையும் இருக்கும்.
அளவு (Magnitude) + திசை (Direction) இரண்டும் சேர்ந்த அளவுகள் தான் Vector Quantities.
Simple Understanding:-
அளவு (Magnitude) + திசை (Direction) இரண்டும் சேர்ந்த அளவுகள் தான் Vector Quantities.
Examples:
➡️ வேக திசை (Velocity) → 40 km/h வடக்கு (North) → அளவும், திசையும் இருக்கு
➡️ இடப்பெயர்ச்சி (Displacement) → 5 km கிழக்கு (East) → அளவும், திசையும் இருக்கு
➡️ பலம் (Force) → 10 N மேல் (Upward) → அளவும், திசையும் இருக்கு
➡️ வேகம் + திசை (Acceleration) → 5 m/s² திசை → அளவும், திசையும் இருக்கு
Simple Understanding:-
ஒரு பைக் 100 கிலோமீட்டர் வேகத்துல போகுது அப்டினா நாம அளவை மட்டும் சொன்ன அது scalar value
அதே பைக் ௧௦௦ கிலோமீட்டர் வேகத்துல கிழக்கு பக்கமா போயிடு இருக்கு அப்டினு சொன்னா அது vector value
Comments
Post a Comment