எங்கே எப்படி Real Life Data Science & Machine Learningகில் Matrix பயன்படுகிறது
Data Science மற்றும் Machine Learningல் நாம நிறைய Numbers மற்றும் Dataset-களை கையாளுகிறோம். Dataset என்றால், பல Rows மற்றும் Columns கொண்ட Table மாதிரியான Structure. Matrix உபயோகிப்பதால், பெரிய அளவிலான Calculationகளை வேகமாகவும் எளிமையாகவும் கணக்கிடலாம். தரவுகளை சேமிப்பது நீங்கள் காணும் எந்த Dataset-யும் (Excel file, CSV, SQL table) எல்லாமே ஒரு Matrix மாதிரி Structure தான். Rows = Records (Row 1, 2, 3, …) Columns = Features or Variables (Column A, B, C, …) ஒரு Column-ல் இருக்கும் Headings: Name, Subject, Employee ID, Attendance, Height, Weight இதெல்லாம் Features. ஒரு Row-ல் இருக்கும் Values: Akash, Ajith, Maths, English, 5 feet, 6 feet — இவை எல்லாம் Values. இது தான் Data சேமிக்க மிக சிறந்த முறை . மனிதர்களுக்கும் Computerகும் சமமாக புரியும். Image Processing Digital Images எல்லாம் Matrixஸாக சேமிக்கப்படும். ஒவ்வொரு Pixel-க்கும் ஒரு Matrix Value இருக்கும், அது Computerகு அந்த Pixel-ல் என்ன Color, density காட்டணும் என்பதை சொல்லி தரும். Black & White படம் → ...