Matrix or Matrices என்றால் என்ன? Matrix Tableஐ எப்படி புரிந்து கொள்வது?
Matrix என்பது வரிசை (Rows) மற்றும் நெடுவரிசை (Columns) கொண்ட ஒரு Table மாதிரியான Box. இதில் Numbers சேர்க்கப்பட்டிருக்கும்.
Row (வரிசை) என்றால் என்ன? Column (நெடுவரிசை) என்றால் என்ன?
கீழே உள்ள Excel டேபிளைப் பாருங்கள்:
நீங்கள் பார்க்கும் 1, 2, 3, 4, 5, 6, 7 — இவை எல்லாம் Row-கள் ஆகும். இவை Left to Right செல்லும்.
நீங்கள் பார்க்கும் Serial Number, Product, Quantity, Price, Sales - இவை எல்லாம் Column-கள் (நெடுவரிசைகள்) ஆகும். இவை Top to Bottom செல்லும்.
இந்த முறை உங்கள் School Math Table, Excel Table, SQL Table மற்றும் பல Data தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இது தான் Computer Dataகளை புரியவைக்கும் சரியான முறை. இதில் தரவை தேடுவதும், Filtering, Visualize பண்ணவும் எளிதாக இருக்கும்.
Row எப்படி வாசிப்பது?
Row 1 – Serial Number, Product, Quantity, Price, Sales என்று இடம் இருந்து வலமாக வாசிக்க வேண்டும்.
Row 2 – 1, Product 1, 5, 25, 125 என்று வாசிக்க வேண்டும்.
Column எப்படி வாசிப்பது?
Column A – Serial Number, 1, 2, 3, 4, 5 என்று மேலிருந்து கீழாக வாசிக்க வேண்டும்.
இந்த மாதிரியே Matrixஸையும் வாசிக்க வேண்டும்.
இந்த மெட்ரிக்ஸ் 2 x 3 மெட்ரிக்ஸ் என்று அழைக்கப்படும். ஏனெனில் இதில் 2 வரிசைகள் (Rows) மற்றும் 3 நெடுவரிசைகள் (Columns) உள்ளன.
முதல் வரிசையில் உள்ள Values: 1, 2, 3
இரண்டாவது வரிசையில் உள்ள Values: (நீங்க Comment-ல சொல்லுங்க...)
முதல் நெடுவரிசை Values: 1, 5
இப்போ நீங்க பார்த்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது நெடுவரிசையின் Valuesகளையும் சொல்லலாம்.
M = 1,2,3,5,6,7
இந்த Numbers அனைத்தும் மெட்ரிக்ஸின் elements ஆகும்.
இவை Dataகளை சேமிக்க, Equationகளை தீர்க்க, அல்லது Math, Data Science, மற்றும் Data Analysis பிரச்சனைகளை தீர்க்க பயன்படும்.
Matrix vs Matrices
நீங்க ஒரு Matrix Table மட்டும் வைத்திருந்தா அது Matrix.
நீங்க ஒன்றுக்கு மேற்பட்ட Matrix Table வைத்திருந்தா அது Matrices.
ஒரே Matrix table → Matrix
பல Matrix tables → Matrices
Comments
Post a Comment