Linear Transformation என்றால் என்ன?
Linear Transformation என்பது ஒரு அளவை அல்லது அளவுகளின் குழுவை கணித விதிகளை பயன்படுத்தி மாற்றுவது. இதில் Relationship நேராக (linear) இருக்கும்.
இதன் அர்த்தம் என்ன?
நீங்கள் ஒரு Input value எடுத்து அதற்கு ஒரு formula apply பண்ணி Output value உருவாக்குறீங்க.
எளிமையான வார்த்தைகளில்:
-
Scale பண்ணுறீங்க (அதாவது அளவை அதிகப்படுத்துறீங்க இல்ல குறைக்குறீங்க)
-
இல்ல Shift பண்ணுறீங்க (அதாவது மேல, கீழ், இடம், வலது என நகர்த்துறீங்க)
உதாரணங்கள்:
-
ஒரு சம்பளம் ₹10,000 இருக்குது. அதுக்கு 10% அதிகரிப்பு கொடுக்குறீங்க → புதிய சம்பளம் = ₹11,000.
இது Linear Transformation ஏனென்றால் நீங்க அளவை மட்டும் scale பண்ணுறீங்க.
-
ஒரு மாணவர் மதிப்பெண்களுக்கு 5 bonus marks add பண்ணுறீங்க:
Original Mark = 70
New Mark = 75
இது கூட Linear Transformation தான்.
ஒரு படத்தை Zoom பண்ணும் போது, structure அழியாமல் பெரியதா சின்னதா ஆகுது. இது Scaling ஆகும்.
Scaling என்பது Linear Transformation-ல் ஒன்றுதான்.
சுருக்கமாக சொன்னால்:
Linear Transformation = Scale பண்ணுறது அல்லது Shift பண்ணுறது. ஆனால் உள்ள உருப்படிகளை (structure) மாற்றாமல்.
Comments
Post a Comment