நேரியல் ஆல்ஜிப்ரா (Linear Algebra) என்றால் என்ன?

 

Linear Algebra என்பது கணிதத்தின் ஒரு கிளை.



இது Vectors (திசை மாறிகள்), Matrices (அணி), மற்றும் Linear Transformations (நேரியல் மாற்றங்கள்) பற்றியது.

இது Data Science, Machine Learning, Computer Graphics போன்றவற்றின் அடிப்படை.



Linear Algebra எதில் உதவுகிறது?

✅ பல மாறிகள் (Variables - changing values) உள்ள சமன்பாடுகளை (Equations) தீர்க்க

✅ Matrices (Rows & Columns) வைத்து தரவை பிரதிபலிக்கவும் மாற்றவும்

✅ ஒரு சிஸ்டம் எப்படி நடக்கிறது என்று புரிந்து கொள்ள (Multiple inputs → Output எப்படி மாறும்)


முக்கியமான கருத்துக்கள் (Key Concepts):

  1. Scalars (ஸ்கேலர்)

    • இது Magnitude மட்டும் கொண்டது (எ.கா: Speed மட்டும்).

    • ஒரு எண் மட்டுமே. (எ.கா: 8, 6, 10)

  2. Vectors (வெக்டர்)

    • இது Magnitude மற்றும் Direction இரண்டும் கொண்டது.

    • எண்கள் பட்டியல் (Ordered list of numbers)

    • எ.கா: [2,3] , [4,5], [10,50]



  3. Matrices (மாட்ரிக்ஸ்/அணி)

    • இது Rows மற்றும் Columns உடைய எண்களின் கட்டமைப்பு.

    • எ.கா: 2x2 Matrix, 4x4 Matrix



  4. Matrix Multiplication (மாட்ரிக்ஸ் பெருக்கல்)

    • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Matrices-ஐ சேர்த்து Data-வை மாற்றுவது.

  5. Linear Transformation (நேரியல் மாற்றம்)

    • Matrix × Vector = Data-ஐ மாற்றுவது.

  6. Determinants (டிட்டர்மினன்ட்)

    • ஒரு Square Matrix-இல் இருந்து ஒரு எண் கணக்கிடப்படும்.

    • அந்த எண் 0 என்றால் அந்த Matrix-ஐ Inverse செய்ய முடியாது.

    • 0 இல்லையென்றால் Inverse செய்ய முடியும்.


  7. Inverses (இன்வெர்ஸ் மாட்ரிக்ஸ்)

    • ஒரு Matrix-இன் Inverse Matrix-ஐ பெருக்கினால், Starting Point-க்கு திரும்பிச் செல்வோம்.

Comments

Popular posts from this blog

What is Artificial Intelligence? What is Machine Learning? What is Data Science? how they are related to each other?

Linear Algebra - What is it?

What is a Python Library?